உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் நகரில், பொதுமக்கள் முன்னிலையில் ஓர் இளைஞர் செய்த ஆபாசச் செயல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. செப்டம்பர் 17, 2025 (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில், காஜியாபாத்தில் ஒரு சந்திப்பு அருகே, பைக்கில் அமர்ந்திருந்த ஒருவர், அருகில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் தனது அந்தரங்க உறுப்புகளை வெளிப்படுத்தி, பாலியல் சைகைகள் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் செயல் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, அது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தக் காட்சிகள், ‘@Miguel_de_Cerva’ என்ற X பயனர் ஒருவரால் பதிவேற்றம் செய்யப்பட்டன. வீடியோவில், குற்றவாளி தனது பைக்கை சாலையோரத்தில் நிறுத்தி, ஒருவரைப் பார்த்தபடி, வெளிப்படைவாக ஆபாசச் செயல்களைச் செய்து, சில நொடிகளுக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம்.
Hello @Uppolice @ghaziabadpolice
A man sitting on a bike is making obscene sexual gestures towards women and children in Sector 9, Vijay Nagar Ghaziabad. This is creating fear and harassment in the area. Immediate action is requested. pic.twitter.com/3a4XgIn2mB— Keshav Sharma (@Miguel_de_Cerva) September 17, 2025
வீடியோ வெளியான முதல் நாளில் 1.85 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பதிவாகியுள்ளன. அதேசமயம், அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு, அந்த X பயனர் காஜியாபாத் காவல்துறையை டேக் செய்து கேட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காணொளி வெளியானதையடுத்து, பல சமூக ஊடக பயனாளர்கள் கடும் அதிர்ச்சி மற்றும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். “பொதுமக்கள் முன்னிலையில் இவ்வாறான செயல் நடப்பது மிகுந்த ஆபத்தான சூழலை உருவாக்குகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணிகள் நடைபெறலாம் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
