இந்த நேரத்தில் உங்களை சந்திக்கிறது எனக்கு ரொம்ப சந்தோசம்.  நீங்க என்ன கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்றேன். விஜய் கட்சி தொடங்குகிறேன் என்று சொல்லி இருக்காரு. ஆனால் ரெண்டு வருஷம் டைம் கேட்டிருக்காரே, எனவே அவரை  நாம  விமர்சனம் பண்ணுவது நியாயமான விஷயமாக இருக்காது. ஏனென்றால் ஒருத்தர் ஆரம்பிக்கிறார்.

ஜனநாயக நாட்டில் யார் வேணாலும் ஆரம்பிக்கலாம். ஒரு பிரபலம் தன்மை இருக்கிற ஒருத்தர் கட்சியை ஆரம்பிக்கும் போது,  மற்றவர்களை விட அவரைப் பற்றி அதிகமாக மக்களுக்கு தெரியும். ஆனால் அவருடைய கொள்கை என்ன ?  மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகிறார் ? அப்படி என்று பார்த்து தான் அந்த கட்சியினுடைய வளர்ச்சி இருக்கும். விஜய்யினுடைய கட்சி ஆரம்பிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விஜய் கட்சியை பற்றிய விமர்சனம் செய்வதற்கு உண்டான நேரமே இல்லை என பேசினார்.