பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பவன் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியான நிலையில் நடிகை பூனம் கவுர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பவன் சிங் காலடியில் உஸ்தாத் சிங் புகைப்படம் இருக்கிறது.

காலுக்கு அடியில் புகைப்படம் இருப்பது ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை அவமானப்படுத்துவது போன்றதாகும். இந்த போஸ்டரை பட குழு மாற்றுமா அல்லது அதற்கு விளக்கம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது நடிகர் பவன் கல்யானின்  ஆணவத்தை காட்டுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.