பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய முன்னாள் காதலர்கள் குறித்து பேசி உள்ளார்.
அவர் தன்னுடைய முன்னாள் காதலர்கள் அற்புதமானவர்கள் என்றும் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார். என்னுடைய முன்னாள் காதல்கள் முறிந்ததற்கு காரணம் நான் உறவுகளுக்கு இடையே நேரம் ஒதுக்காதது மற்றும் கருத்து வேறுபாடு போன்றவைகள் தான். ஆனால் ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்கு உடனடியாக தாவுவது தவறு என்பதை பிற்காலத்தில் புரிந்து கொண்டேன். என்னுடைய வேலைகளை விட உறவுகளுக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் நிக் ஜோன்ஸ் ஒரு அற்புதமான கணவர் என்று தெரிவித்துள்ளார்.