தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் கிச்சலு என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. சமீப காலமாக நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில், தற்போது காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை காஜல் அகர்வாலின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.