பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸ் என்பவரை நடிகை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஹாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்

இந்நிலையில் முன்னாள் காதலர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதில், “தன்னுடன் பணியாற்றிய பல நடிகர்களை காதலித்தேன் என்பது உண்மை தான். உறவு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது தெரியாது. யோசனைகளுக்கு ஏற்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்வேன். அப்போது தனது தவறு புரியவில்லை” என ஓபனாக பேசினார். 2013ல் நடிகர் ஷாருக்கானும் பிரியங்காவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.