தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின்  சார்பில் கிருஷ்ணராயபுரம் தொகுதியின் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுள்ள சத்யா அவர்கள், தனது அறிமுக உரையின் போது பேசிய அதிரடியான மற்றும் ரைமிங்கான கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகி வருகின்றன. தனது கன்னிப் பேச்சிலேயேஎதிரிகளின் விமர்சனங்களுக்குப் படு சுவாரஸ்யமாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிலடி கொடுத்து அவர் ஒட்டுமொத்த அவையின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

குறிப்பாக, தவெகவினரைச் சில அரசியல் விமர்சகர்கள் ‘அணில் கூட்டம்’ என்று கிண்டலடித்ததைச் சுட்டிக் காட்டிய அவர், “நாங்கள் ஒன்றும் கரண்ட் வயரை கட் பண்ற அணில் கூட்டம் கிடையாது; மாறாக, அரசியலின் கரண்ட் இயலையே மாற்றி எழுதிவிட்டுப் போக வந்த ஒரு வெற்றிக் கூட்டம்” என்று மரண மாஸ் பஞ்ச் பேசியுள்ளார். மேலும், “எங்களை அணில் கூட்டம் என்று விமர்சித்தவர்கள் இன்றைக்கு எந்த மரப் பொந்துக்குள் போய் ஒளிந்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அவர், தங்களை ஏளனம் செய்பவர்களை நோக்கிக் கடுமையாகச் சாடியதுடன், தாங்கள் எந்தவித அறியாமையிலும் உள்ளவர்கள் அல்லவென்றும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் தலையெழுத்தையே மாற்றி எழுத வந்துள்ள ஒரு மாபெரும் வெற்றிப் படை என்றும் முழக்கமிட்டார். அறிமுகப் பேச்சிலேயே அவர் வெளிப்படுத்திய இந்த அதிரடியான வீச்சும், துணிச்சலான வார்த்தைகளும் தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது.