தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படங்களின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி தன்னுடைய 170-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விவேக் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் சிவாஜி திரைப்படம் ஜெயிலர் படத்தில் ரிலீசுக்கு முன்பாக மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.