தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர். தற்போது இரண்டு கிட்னியும் செயலிழந்ததால் அதற்காக மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் போண்டாமணியின் மகள் சாய்குமாரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது போண்டாமணியின் நிலைமையை அறிந்து பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் கல்லூரியில் அவருடைய மகள் சாய்குமாரிக்கு பிசிஏ வழங்கியுள்ளார். மேலும் இதற்காக ஐசரி கணேஷ்க்கு நடிகர் போண்டாமணி நன்றி தெரிவித்துள்ளார்.