
தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இது தனி நபர்கள் செய்யக் கூடியதல்ல. மிகப்பெரிய வன்முறை கும்பல்… ஒரு நெட்வொர்க்வோடு, திட்டமிட்டு….. ஒரு சங்கிலி போல….. ஒரு குழு இருந்து கொண்டு செயல்படுறாங்க…. குற்றங்களை செய்றாங்க… தப்பித்துக் கொள்ளலாம்…. சுதந்திரமா சுத்தலாம் என்கின்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கு..
குற்றம் செய்யக்கூடியவர்கள் மனதில் ஒரு துளி அளவும் கூட அச்சம் இல்லை. அதனால அச்சத்தை எப்படி உருவாக்க முடியும்? என்று காவல்துறைக்கு தெரியும்… காவல்துறை முடியாதுன்னு ஒன்னும் கிடையாது. ஆனால் எல்லா காவலர்களுமே… இன்னைக்கு இருக்கின்ற கான்ஸ்டபிள் லெவல்ல 25 காவலர்கள் இருந்தால், 18 பேர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
பல பேர் காவல் நிலையத்துக்கே போய் புகார் கொடுக்க முடியவில்லை…. கொடுத்தாலும் அதுக்கு மதிப்பு இல்ல. வாபஸ் வாங்க சொல்லி அச்சுறுத்தல் வருது. அதுல நடவடிக்கை இல்ல… அவங்களுக்கு போன் பண்ணி விடுகின்றார்கள். போலீஸ்காரர்களே போன் பண்ணிட்டுருந்தாங்க. இப்படி காவல்துறையினர் ஜாதி பாகுபாடு பார்க்கின்றார்கள். காவல்துறையில் உச்சகட்டமா ஜாதி பாகுபாடு இருக்கின்றது.
திருநெல்வேலி மணக்கரையில் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உடைய ஒரு மிக முக்கியமான காவலர் என்ன சொல்றாரு ? இது ஒன்னும் இல்ல… ஒரு பீடிக்காக நடந்தது… இதை பெருசு படுத்தாதீங்க என சொல்லுறாரு… தூங்கிட்டு இருந்தவனுக்கும், பத்து பேர் கொண்ட கும்பலுக்கும் என்ன சம்பந்தம் ? அவங்க தான் எல்லா விதமான தகவலும் கொடுக்குறாங்க. மக்கள் பேச முன் வராத காரணமே நாம ஏதாவது பேசினால் மீண்டும்…. காவல்துறை அவர்களிடத்தில் செய்தியை போட்டு விடுவாங்க. வாட்ஸ் அப் அனுப்புவாங்க…. நாம போணுனால் அடுத்த பத்தாவது நிமிஷம் மிரட்டல் வருதுன்னு மக்கள் பயப்படுறாங்க என தெரிவித்தார்.