கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் பட்ஜெட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் எந்த விதத்திலும் உதவாது” எனக் கூறிய அவர், வேளாண் துறை வெறும் 3% மட்டுமே வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும்போது, அதற்குத் தனி பட்ஜெட் எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பித்தீர்களா? என்றும் தமிழக அரசை நோக்கி அண்ணாமலை சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.
