செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,   மத்திய அரசே ஒன்னும் கொடுக்கலன்னு சொல்லுறீங்க.   900  கோடி முதல் கொடுத்த பணத்தை நீங்க சரியாக உபயோகிச்சிருந்தாலே தடுத்து நிறுத்தி இருக்கலாம். வரப்போற புயல் வரத்தான் போகுது,  ஆனால் தடுத்து நிறுத்திருக்கலாம் சேதத்தை…. ஒரு பைசா… ஒரு பைசா எப்படி சொல்றீங்க ? ஒரு பைசாவா ? கொடுத்த  5000 கோடி, கொடுத்த 950 கோடி எங்க போச்சு? அதனால நான் கொடுக்காம இருக்கேன்,  அதையும் நான் சொல்லல. 

ஆனால் கேள்வி கேக்குறவுங்க  தயவு செஞ்சு ஒரு பைசா என்கிற பாசையை கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க… ஒரு பைசாவா ? மிக்ஜாம் புயலில் சென்னை சீரழிஞ்சு… 5000 கோடி எங்க போச்சு ? அதுக்கு முன்னாடி புயல் எது வந்தாலும் சரி,  அந்த 950 கோடி உங்க கையில வச்சுக்கங்கன்னு, வருஷம் முழுக்க கொடுக்க வேண்டிய 950 கோடியை ஆல்ரெடி கொடுத்து வைத்திருந்தோமே, அது எங்க உபயோகிச்சிங்க ? அதை பத்தி கொஞ்சம் கணக்கு சொல்லுங்க….

வரக்கூடிய பணம்,  வரப்போற பணம், ஹை லெவல் மீட்டிங் அப்பறம் வரத்தான் போகுது.  சும்மா இந்த மாதிரி கேள்வியை கேட்டு கேட்டு மக்களை ஒரு பிரணப் படுத்தி,  மோடிக்கிட்ட இருந்து ஒண்ணுமே வரல சொல்றதுக்கு  ப்ளீஸ் அட்டென்ட் பண்ணாதீங்க…  உண்மையை நான் திருப்பி திருப்பி சொல்லிட்டு தான் இருப்பேன்.  நிவாரணம் நிதி ஹைலெவல்  கமிட்டிங் மீட்டிங் நடந்த பிறகு வர தான் போகுது. அதுக்கு முன்னாடி 900 கோடி கொடுத்தேனே தம்பி.

அது என்னாச்சு ? அதை பற்றி கொஞ்சம் கணக்கு சொல்ல சொல்லுங்க. 5000 கோடி கொடுத்தோமே அதை பத்தி கணக்கு சொல்ல சொல்லுங்க. இதை பிடிச்சுகிட்டு அவங்க சொல்றாங்க என நீங்களும் அதே கேள்வியை என்கிட்ட கேட்டுட்டு இருந்தா நானும் பதில் சொல்லுவேன்.  இந்த கேள்வியை  அவங்க கிட்ட கேளுங்க. இந்த கேள்வியையும், 5000 கோடி கொடுத்தாங்க இல்லையா ?   சென்னை டிரைனேஜ் விஷயம். எனக்கு சொல்லுங்க ஐயா. எங்க கட்டுறாங்க.

டிரைனேஜ் ? எங்க போது மழை தண்ணி ? வெள்ளம் ஏன் வருது ? டிரைனேஜ்ல நீர்  போய்விட்டது என்றால், ஏன்வெள்ளம்  வருது ? அத கேக்குறீங்களோ,  அந்த கேள்வியை,  திராவிட முன்னேற்றக் கழக அரசுல கேக்குறீங்களா ?  ஐயா ஐயாயிரம் கோடி நீங்க உபயோகிச்சீங்க…  90% உபயோகச்சிட்டீங்கன்னு உங்க அமைச்சர் சொன்னாரு. பிறகு ஏன் இங்க  தண்ணி தேங்குதுன்னு கேட்குறீங்களா ? அதை கேளுங்க என தெரிவித்தார்.