சண்டிகர் மாநிலத்தில் அதிகாரிகளின் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி எஸ்.பி வருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத கட்சியாகும். நாதகவினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு இணையதள குற்றங்களை செய்யும் கூலிகளை கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சியை குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் முன்னிலையில் திருச்சி எஸ்.பி அருண்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சைபர் கிரைம் இணையதள குற்றங்கள் மிரட்டல்கள் சமீப காலத்தில் அதிகரித்து வருவதாகவும் அதை கண்காணிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது குறித்தும் விரிவான விளக்கத்தை திருச்சி எஸ்.பி வருண்குமார் ஆதாரங்களோடு விளக்கிப் பேசினார்.