செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 18வது செயற்குழு – பொதுக்குழுவில் தலைவர் அவர்களால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தலைமை கழகத்திற்கு என் அன்பு சகோதரர்களாகிய  பத்திரிக்கை சகோதரர்களை தலைமை கழகம் சார்பில் அன்போடு நான் வரவேற்கிறேன். இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்களுக்கு என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ,  கேளுங்கள்…. அனைத்திற்கும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

அரசியல் என்பதே சவால் தான் முதலில். அதிலும் இன்றைக்கு பெண்கள் அரசியலில் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம். அதற்கு ஒரே ஒரு உதாரணம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள். அப்படி இருக்கும் பொழுது நான் கேப்டன்னுடைய மனைவியாக… என் வாழ்க்கையை தொடங்கினேன். அவர் கரங்களை  பற்றி கொண்டு….. அவர் பின்னால் இருந்து வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்….

ஆனால் பொருளாளர் என்ற பதவி தலைவர் அவர்கள் தந்தார்கள்….. இன்றைக்கு ஒட்டுமொத்த கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அத்துணை பேருடைய விருப்பம் பல ஆண்டுகளாக கேப்டன் கிட்ட வச்ச கோரிக்கையை…. கேப்டன் அவர்கள் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்ற  மிகப்பெரிய பதவியை….. பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.