செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனும்,  நானும் மிகப்பெரிய படாங்களை… மிகப்பெரிய வலிகளை….. மிகப்பெரிய ஒரு கஷ்டங்களை எல்லாம் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்...  நடிகராக இருந்த வரைக்கும் வெறும் சினிமா துறையில் மட்டுமே நாங்கள் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு இருந்தோம்…. அப்போ கேப்டன் அவர்கள் எல்லாருக்கும் பொதுவானவராக….. எல்லாராலும் விரும்பப்படக்கூடியவராக இருந்தார். எப்பொழுது கேப்டன் கட்சி என்று வந்தாரோ,

அப்போது  அத்தனை பேரும் கேப்டனுக்கு எதிராக மாறுகின்ற ஒரு சூழ்நிலை வந்தது. அத்துனை எதிர்ப்புகளையும்,  சவால்களையும் சந்தித்து….. எதிர்நீச்சல் போட்டு…. கேப்டன் தன்னுடைய பயணத்தை திரையுலகிலும் சரி…. அரசியலிலும் சரி… பயணித்தார்…. அதற்கான வெற்றியை மக்களும் கொடுத்தார்கள்.

எங்களுக்கு என்ன ஒரு செட் பேக் கேப்டன் உடைய ஹெல்த்தில் ஒரு சின்ன செட் பேக் இருந்ததால இன்றைக்கு எல்லோருக்கும் ஒரு ஐயம்….. இதை எப்படி இவங்க வழிநடத்த முடியும் ? எது எப்படி செல்லும் என்று…..  ஆனால் நிச்சயமாக உங்களுக்கு எல்லாருக்கும் நான் சொல்றேன்….. கேப்டன் உடைய ஆணைக்கிணங்க…… அவருடைய ஆசிர்வாதத்தோடு தான்…. நாங்கள் ஒவ்வொரு நாளும் தொடங்குகிறோம்…… இப்ப கூட பிரஸ்மீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்….

இப்போ லைவ்ல கேப்டன் பார்த்துட்டு தான் இருக்காங்க…. அவருடைய வழிநடத்தலின் படி…. அவருடைய ஆணைக்கிணங்க தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடைசி வரைக்கும் இயங்கும்…  எங்கும் எங்கள் கழகத் தலைவர் நிச்சயமாக எங்களோடு இருந்து,  எங்களை வழி நடத்துவார்…. எல்லா சவால்களையும்….. நீங்க கேட்டீங்க…. என்ன பாடம் கத்துக்கிட்டீங்கன்னு…..

என்னவெல்லாம் இந்த யங் ஏஜ்ல நூறாண்டு காலத்திற்கு வருகின்ற அனைத்து அனுபவத்தையும் அரசியல் கட்சி ஆரம்பித்து பிறகு நாங்கள் பெற்று இருக்கிறோம். அந்த அனுபவம் எங்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக…. பக்க பலமாக இருந்து, இன்னைக்கு நாங்கள்  இன்னும் சக்தி கொண்டவர்களாக இயங்க அந்த வலிகள் எங்களை வலிமையாக்கி இருக்கிறது என தெரிவித்தார்.