தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  18ஆம் தேதியே ராத்திரி அந்த விவரம் வெளியே வந்துடுச்சி.  அதுக்கப்புறம் அங்கே போர்ட்டு போயிட்டு இருக்கு. ஹெலிகாப்டர் மூலமாவும் பண்ணிட்டு இருக்காங்க. எவ்வளவு ஹெலிகாப்டர் எவ்வளவு ? போர்ட்  எப்பாவது  அப்படிங்கற மாத்திரம் விவரம் கொடுக்குறேன் ?

மொத்தமா சேர்த்து 21ஆம் தேதி டிசம்பர் வரைக்கும் நம்ம கையில இருக்கக்கூடிய செய்தி….  42290 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாரும் இருக்காங்க மாநில அரசு மூலமா மீட்கப்பட்டவுங்க…. ராணுவப்படை மூலமாக…. கப்பல் படை மூலமாக…. கோஸ்ட் கார்டு மூலமாக….. இதெல்லாம் சேர்த்து  42, 290 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்….  ஆனால் இப்ப வரைக்கும் நம்மளுக்கு அதிகாரபூர்வமாக தெரிஞ்ச ரெகார்ட்  31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மிக வருத்தமான விஷயம் 31 பேர்…  இத்தனை மீட்பு பணிக்கு…..  உடனடியாக மத்திய அரசும் செயல்பட்டு  போயிருந்தாலும் 31 பேர் லாஸ்ட்டா கிடைச்ச விஷயம்….  அதுல நம்பர்ல ஏதாவது இன்னைக்குள்ள வேற விதமா நம்பர் மாறினா…..  எனக்கு இப்போதைக்கு செய்தி இல்ல. ஆனால் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வரைக்கும் எங்களுக்கு கிடைச்ச விஷயம் என்னன்னா 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதுல எல்லா டிபார்ட்மெண்டும்…. மத்திய அரசு சேர்ந்த எல்லா டிபார்ட்மெண்டும் ஒத்துழைச்சி உடனடியா எல்லாரும் சேர்ந்து  களத்தில் இறங்கி இறங்கினார்கள். அப்படி இறங்கியதனால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கேயே அம்புட்டு தத்தளிச்சிட்டு இருக்காங்க…  அவங்களால  முன்னும் போக முடியல,  பின்னவும் போக முடியல அப்படிங்கற நிலைமை வந்தபோது….

அந்த ரயில் நிலையத்திலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற  பயணிகளை ரயில்வே சார்பில் சிறப்பு ரயிலும்,  போதுமான அளவு பேருந்து வசதியும் கொடுத்து அவங்க எல்லாரும் மீட்கப்பட்டார்கள். அதை தவிர 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில கூட ரயில்வே… எல்லா டிபார்ட்மெண்டோட சேர்ந்து நல்ல விதமாக சமயத்தில் உதவி பண்ணி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.