நடிகர் விஜய் சேதுபதியின் 52 ஆவது படம் “தலைவன்- தலைவி”. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்தியஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நித்தியாமேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் உள்ள “பொட்டலம் முட்டாயே” பாடல் வெளியாகி ரீல் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும் இப்படத்தில் கணவன்- மனைவி இடையேயான உறவு குறித்தும் குடும்ப கதையாக உருவாகியுள்ள படமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் சேதுபதியும், பாண்டியராஜ் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்  பட விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியதாவது, இப்ப படத்தை தொடங்கும் போது எனக்கும், இயக்குனருக்கும் இடையே லேசான மோதல் இருந்தது உண்மைதான்.

ஆனால் எல்லாம் சரியாகி இப்போது நாங்கள் நல்ல உறவில் உள்ளோம். சிறு சிறு சண்டைகளும் அழகு தானே. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மனைவியே கோபப்படும் அளவுக்கு இருவரும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன் என கூறினார்.

இதனை அடுத்து இயக்குனர் பாண்டியராஜ் பேசும்போது. எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சிறிய ஊடல் இருந்தது உண்மைதான். அதை பெரிது படுத்த வேண்டாம். இந்த கதை விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்டது. அதுவும் நல்லபடியாகவே நடந்து முடிந்துள்ளது சினிமாவில் சிறு சிறு ஊடல்  சகஜம்தான். எங்களுக்குள் தற்போது நல்ல நட்பு நீடித்திருக்கிறது எனக் கூறினார்.