நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் “கூலி”. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான கூலி வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனிடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சவுபின் நடித்துள்ள கதாபாத்திரத்தை  பகத் பாசிலுக்காக எழுதியதாகவும், ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

மேலும் அந்த கதாபாத்திரத்தை உருவாக்க 6 மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பகத்பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.