இந்திய பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத். இவர் தமிழில் லியோ திரைப்படத்தில் விஜயின் தந்தையாக நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் லியோ படத்தில் “லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்” என சஞ்சய் தத் கூறிய கருத்து சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சஞ்சய் தத்துக்கு பதில் அளிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, “அதற்குப் பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் செய்து நான் வேடிக்கையாகத்தான் கூறினேன் ஆனால் சமூக ஊடகங்கள் அதனை பெரிதாகி விட்டார்கள் அதனால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என கூறினார்.
நான் “பிரச்சினை இல்ல சார் விடுங்க” என்று சொன்னேன் என கூறினார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு மிகப்பெரிய இயக்குனரோ அல்லது மேதையோ கிடையாது நான் என் படங்களில் பல தவறுகளை செய்துள்ளேன்.
அதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நானும் சஞ்சய் சாரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம். அவருடன் மீண்டும் படம் செய்வேன்” என கூறினார்
