காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடித் தேவைகளையும், காவிரி படுகை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று (01.09.2026) தண்ணீரைத் திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அணையின் தற்போதைய நீர் இருப்பு நிலவரத்தை முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுச் சரியான நேரத்தில் அணை திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
விவசாயப் பணிகளைத் தடையின்றித் தொடங்குவதற்கும், குறுவை மற்றும் சம்பா சாகுபடியைக் காப்பதற்கும் நீர் மேலாண்மைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் இருப்பு குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், விவசாயிகளுக்குத் தங்குதடையின்றித் தண்ணீர் சென்று சேருவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நிகழ்வின் போது அரசின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்து நீர்திறப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.
பருவமழை மற்றும் டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகள் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்து, மேட்டூர்… pic.twitter.com/eO5Vpqlk4x
— TN DIPR (@TNDIPRNEWS) September 1, 2026
“>
சம்பா பருவ சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் தடையின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
