தமிழகத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பத்திரப்பதிவுத் துறையின் புதிய ஆன்லைன் முறை வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எவரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே, தங்களுக்கு அருகில் உள்ள தனியார் அலுவலகங்களிலிருந்தோ அல்லது இல்லங்களிலிருந்தோ தங்களது பத்திரப்பதிவுப் பணிகளை மிக எளிதாக இணைய வழியில் முடிக்கத் தொடங்கியுள்ளனர்.

லஞ்ச லாவண்யமின்றி, எந்தவிதமான அலைச்சலுமின்றி சில நிமிடங்களில் பணிகள் நிறைவேறுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஒரு பத்திரத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை நேரில் சென்று நாட்கக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் இருந்தது.

ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறை அந்தத் துயரங்களுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனிடையே, சேவையினை மேலும் மெருகேற்ற சர்வர் வேகத்தை அதிகரிப்பது மற்றும் டிடிஎஸ் செலான்களை நேரடியாக அதே தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதிகளைக் கொண்டுவந்தால் இந்தச் சேவை நூறு சதவீதம் தடையற்றதாக மாறும் என்று பொதுமக்கள் தரப்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தவெக அரசின் முதன்மைக் குறிக்கோளாகச் செயல்பட்டு வருகிறது.

“>

 

பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிர்வாக முறையில் இதுபோன்ற அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள தமிழக அரசு, லஞ்சமற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.