தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 12 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இதேபோன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் விடுதலை மற்றும் பத்துதல திரைப்படங்களில் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். பத்து தல படம் முதல் நாளில் 7 கோடி தான் வசூலித்தது என்றும், விடுதலை படமும் முதல் நாளில் குறைவான அளவுக்கு வசூலித்துள்ளது என்றும் பிஸ்மி கூறியுள்ளார். மேலும் பொய்யான வசூல் நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டதை தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து இருக்கலாம் என்றும் பிஸ்மி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.