ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்த சூர்யாவின் கஜினி, தளபதியின் துப்பாக்கி ஆகிய 2 படங்களும் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இதனிடையே கஜினி, துப்பாக்கி ஆகிய திரைப்படங்களின் 2-ஆம் பாகங்களை எடுக்குமாறு ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். துப்பாக்கி திரைப்படத்தின் 2ம் பாகம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது என முருகதாஸ் முன்பே கூறியிருக்கிறார்.

இதேபோல் கஜினி 2ம் பாகமும் வருமா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு முருகதாஸ் பதிலளித்துள்ளதாவது “கஜினி படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் அதிக வசூல் ஈட்டியது. கஜினி திரைப்படத்தில் அசின் நடித்த கல்பனா கதாபாத்திரம் இறந்து விட்டது. சூர்யா கதாபாத்திரமும் நினைவு மறதியாகவுள்ளது. ஆகையால் கஜினி படத்தின் 2ஆம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது இல்லை” என்று அவர் கூறினார்.