தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரி. இவருடைய மனைவி நடிகை ப்ரீத்தா விஜயகுமார். இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது குட்லக் ஸ்டுடியோ என்ற புதிய ஸ்டூடியோவை திறந்துள்ளனர். இந்த ஸ்டூடியோவில் திரைத்துறை பணிகளான டப்பிங், எடிட்டிங், ரெக்கார்டிங் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய ஸ்டூடியோவை நடிகர் சூர்யா, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ மனோ தங்கராஜ், அனிதா தங்கராஜ், நடிகர் விஜயகுமார், ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததோடு குத்துவிளக்கும் ஏற்றினர். மேலும் 40 வருட பாரம்பரியமான நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட் லக் ப்ரிவியுவ் திரையரங்கம் தான் தற்போது குட் லக் ஸ்டுடியோவாக நவீன மையத்தோடு சாலிகிராமத்தில் இயக்குனர் வரியால் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.