தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எந்திரன் 2.0 திரைப்படத்திற்குப் பிறகு தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரணின் கேம் சேஞ்சர் போன்ற படங்களை இயக்கி வருகிறார். கேம் சேஞ்சர் திரைப்படத்தில் க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா மற்றும் அஞ்சலி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி இயக்குனர் சங்கர் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். அதன் பிறகு நடிகர் ராம் சரண் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதனால் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்த படத்தை நடிகர் விஜயின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜுதான் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் ராஜமௌலி தான் அதிக சம்பளம் பெறும் இயக்குனராக இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழ் இயக்குனர் சங்கர் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.