தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவை சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு நேற்று நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா,, தந்தை சிவகுமார் மற்றும் தன் குடும்பத்துடன் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு குடியேறிவிட்டதாகவும், இதனால் சிவகுமாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது சிவகுமார், ஜோதிகா, சூர்யா ஆகியோர் இணைந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். மேலும் இதன் மூலம் சூர்யா குடும்பத்தில் பிரச்சினை என்று வந்த தகவலில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.