லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். இதன் காரணமாக ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்காக லோகேஷ் தனி திரைப்படம் எப்போது எடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சூர்யாவுடன் கண்டிப்பாக ஒரு படத்தில் இணைவேன் என அவர் சொல்லி இருந்தார் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் ஆக வெறும் 2 தினங்கள் மட்டுமே சூர்யா நடித்தார்.

ஆனால் அவருடன் ஒரு முழு திரைப்படத்திற்காக கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக 150 நாட்கள் சூட்டிங் நடத்துவேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.