தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் கோஸ்ட் என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர்.

நாகார்ஜுனா 1984ம் வருடம் லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் நாகார்ஜுனா 1992ல் நடிகை அமலாவை 2-ஆம் திருமணம் செய்துகொண்டார். இப்போது நாகார்ஜுனா தன் முன்னாள் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.