போனி கபூர் தயாரிப்பில் வினோத் டைரக்டில் அஜித் நடித்த திரைப்படம் தான் துணிவு. இந்த படம் வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருந்த இந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலித்தது.

திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதை அடுத்து துணிவு படம் ஓடிடியிலும் வெளியாகியது. வெளியான நாள் முதல் ஓடிடி தளத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதுவரையிலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிய திரைப்படங்களில் துணிவு நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.