சமூக வலைத்தளங்களில் ஒரு நபர், தனது வீட்டின் சமையல் பாத்திரத்தில் இருந்து அரை கிலோ மீனைத் திருடிச் சென்றத் திருடன் குறித்துக் காவல் நிலையத்தில் அளித்தப் புகார் தொடர்பான வீடியோ வெளியாகிச் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. காவல் நிலையத்தில் ஆய்வாளருக்கு (Sub Inspector) முன்னால் நின்ற அந்த நபர், அழுகையுடன் தனதுக் குறைகளைக் கூறியிருக்கிறார்.

தான் ஆசையாகச் சமைத்த மீன், பாத்திரத்தின் மீது செங்கல் வைத்து மூடியிருந்தும், யாரோ வந்து மீனை மட்டும் சாப்பிட்டுவிட்டு, மீதமிருந்த எண்ணெயை (Fish Oil) மட்டும் விட்டுச் சென்றுவிட்டதாக அவர் புலம்பினார்.

 

View this post on Instagram

 

A post shared by Bharat Ek Khoj (@bharatekkhoj_155)

இந்தத் திருட்டு குறித்து உடனடியாக 112 எண்ணில் புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் காவல் துறையினர் பிஸியாக இருந்ததால், தானே நேரடியாகக் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஆய்வாளர் அவரதுப் புகாரைக் கவனமாகக் கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வேடிக்கையானப் புகாரைக் கண்டுப் பலரும் சிரித்து வருகின்றனர்.