“நீரரக்கர்கள்” என்று அழைக்கப்படும் முதலைகள், தண்ணீரில் காட்டும் கொடூர ஆற்றலுக்காகவே இப்படிக் குறிப்பிடப்படுகின்றன. நீருக்குள் அவை வெளிப்படுத்தும் சக்தி சிங்கம் போன்ற கொடூர விலங்குகளையும் எளிதில் வீழ்த்தும் திறன் கொண்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், யானையை முதலை தாக்கும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆற்றைக் கடக்க தண்ணீருக்குள் இறங்கிய யானை  மீது ஒரு பெரிய முதலை திடீரென பாய்ந்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

 

தண்ணீரில் கஷ்டப்பட்டு கரையை அடையும் யானையை, பின்னால் இருந்து முதலை துரத்தி தாக்க முயற்சிக்கிறது. திடீர் தாக்குதலால் பயந்த யானை, தண்ணீரிலிருந்து விரைவாக வெளியேற போராடுகிறது. அதிர்ஷ்டவசமாக, யானை பாதுகாப்பாக கரையை அடைந்து தப்பிக்கிறது. இந்த முழு சம்பவத்தையும் ஒரு சுற்றுலாப் பயணி தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வனவிலங்கு காட்சி @AMAZlNGNATURE என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. மேலும் 1 நிமிடம் 48 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 1,38,000 முறை பார்க்கப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து கருத்துகள் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.