காட்டு விலங்குகள் எப்போது தாக்கும் என்பதற்கு எந்த நேரத்திலும் உறுதி கூற முடியாது. தங்கள் இனத்தவரையே விட்டுவைக்காமல் கொந்தளிக்கும் நிலையில் இருக்கும் இவ்விலங்குகள், மனிதர்கள் அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், தற்போது ஒரு சிறுத்தை மோதல் காட்சி சமூக ஊடகங்களை கலக்கி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரண்டு சிறுத்தைகள் உயிர் மரணப் போராட்டத்தில் ஈடுபடுவது போலக் காணப்படுகிறது. ஒரு சிறுத்தை மற்றொன்றை கடுமையாக தாக்க, தீவிர காயம் அடைந்த இரண்டாவது சிறுத்தை தப்பிக்க முயற்சிக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தாக்குதலில் சிக்கிய சிறுத்தை வேதனையில் போராடும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

https://www.instagram.com/reel/DRp5kRwj_ld/?igsh=ZTJuNm5sOXU1dnpo

இந்த ஆபத்தான காட்டு காட்சியை யாரோ ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பின் வீடியோ வேகமாக வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் wildfriends_africa என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதாகவும், 8

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “இது மிகவும் ஆபத்தான சண்டை,” என்று ஒருவர் குறிப்பிட்டார். “நேஷனல் ஜியோகிராஃபிக்கிலும் இப்படியான கடுமையான மோதல்களை அடிக்கடி பார்க்க முடியாது,” என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார். மேலும் “சிறுத்தைகள் தனித்த வேட்டைக்காரர்கள்; இரண்டு சிறுத்தைகள் நேருக்கு நேர் மோதும் போது சண்டை ஆபத்தான நிலையை எட்டுவது இயல்பு,”
என்று மேலும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.