திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகப் பணிகள் மேலும் 2 மாதங்களில் நிறைவு பெற்று திறக்கப்படும் என்று கூறினார். அதோடு தந்தை பெரியார் காய்கறி அங்காடி கட்டுமான பணிகள் விரைவுப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை, அதிமுகவில் தான் உள்ளது. அதனால் தான் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை விட்டு வெளியேறினார்.
எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது. மீண்டும் தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் தான் பதவி ஏற்பார். கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரவணைத்து வழிநடத்தி செல்கிறார். திமுகவை விமர்சித்தால் தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்று அன்புமணி நினைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்களை மக்கள் மிகுந்த வரவேற்புடன் ஏற்று கொண்டுள்ளனர். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று அவர் திருப்பித்தார்.
