மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு பறை, தமிழ் இசையுடன் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது பெண்களுக்கு பாதுகாப்பு வேலை வாய்ப்பு பூரண மதுவிலக்கு என பாமக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அந்த மாநாட்டில் ராமதாசின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதன் பின் மாநாட்டில் ராமதாஸ் பேசிக் கொண்டிருக்கும்போது தொண்டர்கள் சத்தம் போட்டனர் இதனால் கோபமடைந்த ராமதாஸ் சத்தம் போடக்கூடாது எதுக்கு சத்தம் போடுகிறீர்கள் என்று தொண்டர்களை அவர் கண்டித்தார் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது