
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்.முருகனிடம் ஒன்று கேட்கிறார்கள்…. என்னங்க இப்படி ஆகிவிட்டது ? என்று கேட்டால்… ஜெய் ஸ்ரீ ராம்…. ஜெய் ஸ்ரீ ராம்… என்னங்க விலைவாசி ஏறிடிச்சி… ஜெய் ஸ்ரீ ராம்…… ஜெய் ஸ்ரீ ராம் … என்னங்க வன்புணர்வு செஞ்சி கொலை செய்துவிட்டார்கள்…. ஜெய் ஸ்ரீ ராம்…. இது ஒரு அரசியலா ?
அமித்ஷா போய் பேசுகிறார்…. எங்களுக்கு உத்தரபிரதேசத்தில் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விட்டீர்கள் என்றால், ராமரை இலவசமாக தரிசிக்க விடுகிறோம் என்று சொல்லுகிறார்…. இறைவன் கூட இலவசமாகி விட்டான் கடைசியாக… அவர்கள் பார்வையில் பாருங்க…
ராமர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்… அந்த கட்சினுடைய பிராப்பர்ட்டி மாதிரி தான் ஆகிவிட்டீர்கள். நாட்டு மக்கள் வணங்குகின்ற தெய்வமாக நீங்கள் போற்றவில்லையே… கடவுள் வாழ்க என்பது கட்சியின் முழக்கமாக எப்படி இருக்க முடியும் ? பொதுசிவில் சட்டம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது. என் சட்டையும், உங்கள் சட்டையும் ஒரே மாதிரியாக இல்லை. என் சாப்பாடும், உங்க சாப்பாடும் ஒரே மாதிரி இல்லை.
நீங்கள் சப்பாத்தி வைத்துக்கொண்டு, வெங்காயம் வச்சி சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா… நானும் அவர்களோடு வாழ்த்து இருக்கிறேன். காமன் சிவில் என்பது எப்படி கொண்டுவர முடியும் ? நான் பலமுறை கேட்டு விட்டேன். சீக்கியர்களை நீங்கள் தலைப்பாகையை நீக்கி விட்டு, தாடியை எடுத்துவிட்டு ராணுவத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட முடியுமா உங்களால் ?
நாங்கள் எல்லாம் முடியை நல்லா வெட்டுகிறோம். தாடி எடுத்துக் கொள்கிறோம்… ராணுவத்திற்கு போகும் சீக்கியர்களை அப்படி சொல்லிட முடியுமா ? அப்புறம் எப்படி பொது சட்டம் வரும். அது தேவையில்லை. இப்ப இருக்கின்ற சட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது ? என கேள்வி எழுப்பினார்.