
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், இங்க ஏன் நீட் போராட்டம் நடந்துகிட்டு இருக்குதுன்னா..? நீங்க ஒன்னு புரிஞ்சுக்கோங்க. ஏதோ டாக்டருக்கு மட்டும் பிரச்சனை என நினைக்காதீங்க… இப்ப டாக்டர் மாணவர்கள் உங்களுடைய பிரச்சனையா இது, அப்படின்னா இல்ல. மருத்துவ மாணவர்கள் உங்களுடைய பிரச்சனையா அப்படின்னா இல்லை. கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பார்த்தோம். இதை வெளியிலிருந்து பார்க்கக்கூடிய சாமானியர்களுக்கும் சொல்றேன்.
நீட் என்பது வெறும் மருத்துவ மாணவர்களின் பிரச்சனை இல்ல. பேசிகிட்டு இருக்குற என் பிரச்சனை, பார்த்துட்டு இருக்கின்ற உங்க பிரச்சனை… ஏன் ? கொரோனா பேரிடர் காலகட்டத்தில் நாம பார்த்தோம். டெல்லியில் பிணங்களை சுடுகாட்டில் இடம் இல்லாமல் சாலையில் வைத்து எரித்தார்கள். கொத்து கொத்தாக பிணங்கள்… ஏன் ? மருத்துவ வசதி இல்லை.
தமிழ்நாட்டில் கொரோனா உச்சத்தில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்ற போது, ஒருவர் பதவி ஏற்கிறார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சுகாதாரத்துறை அமைச்சராக அருமை சகோதரர் சுகாதாரத் துறை அமைச்சராக அருமை சகோதரர் மாசு அவர்கள் பொறுப்பேற்கிறார். இங்கே கொரோனாவை எவ்வளவு தூரம் நாம் கட்டுப்படுத்தினோம் என்பது உங்களுக்கு தெரியும். அதில் மிகப் பெரிய வெற்றி கலைஞர் ஈட்டுத்தந்த அரசு மருத்துவமனைகளுக்கும், நாம்முடைய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய மருத்துவர்களுக்கும் இருக்கிறது.
அப்போது நாளைக்கு எல்லாம் தனியார் ஆகிட்டான் அல்லது இந்த மாதிரி தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கிட்டானா…. கொரோனா மாதிரி ஒரு பேரிடர் வந்தால் ? வட மாநிலங்களில் மக்கள் எப்படி கொத்து கொத்தாக மாண்டார்களோ, அது மாதிரி நாமும் செத்து மடியும் நிலை ஏற்படும் என்ற ஒரு அபாயம் இருக்கிறது. அதற்காகத் தான் நீட்டை எதிர்த்து சண்டை போட்டு இருக்கிறோம் என பேசினார்.