செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  காவல்துறையினர் செய்யக்கூடிய இந்த செயல் என்பது,  ஒரு சார்பாக இருக்கிறது. இதுபோன்ற வெறி செயல் தொடருமேயானால் நிச்சயமாக ஜனநாயக ரீதியாக மிகக் கடுமையான போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி எடுக்கும்  இஸ்லாமியர்களை பலிகாடாக்க திமுக முனைகிறது.  பாரதிய ஜனதா கட்சியினுடைய கொடியை எங்கு ஏற்றினாலும்…  அதில் இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சனை வருகிறது ? இந்த எஸ்டிபிஐ,  தமுமுகவுக்கு என்ன பிரச்சனை வருகிறது?

ஒரு கட்சியினுடைய கொடியை ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற ஒரு வன்மத்தை…. திட்டமிட்ட ஒரு எதிர்ப்பு மனநிலையை இஸ்லாமியர்களை வைத்து இப்படி இவர்கள் பளிகாடாவாக ஆக்கினாள்,  நாளைக்கு ஹிந்துக்கள் மத்தியில என்ன எதிர்ப்பு வரும் ? நாளைக்கு ஒரு கலவரம் வந்தால் யார் பாதிப்பா ?  நாளைக்கு ஒரு பெரிய பிரச்சனை வந்தா அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இன்னைக்கு யார் எதிர்த்து….  இந்த கொடியை இவங்க வைக்க கூடாது என்று சொல்கிறார்களோ,  அந்த அடிப்படைவாத… பயங்கரவாத சக்திகள் இவர்கள் வந்து பாதிக்கப்படுவார்களா ?  இதெல்லாம் நாங்கள் கடந்த காலத்துல உணர்ந்து இருக்கிறோம்.  இந்த பாதிப்பை எல்லாம் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு விஷயங்களிலும் இது மாதிரி திட்டமிட்டு திமுக,  இஸ்லாமியர்களை தூண்டி விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பால் இருக்கிறோம். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். பாரத பிரதமடர் திட்டங்களை வீடு வீடுகளுக்கு எடுத்துச் சென்று,  நாங்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதை தடுப்பதற்கு காவல்துறையும்,  திமுகவும் தொடர்ந்து முனைந்து கொண்டிருக்கிறது. இதற்க்கு வன்மையான கண்டனத்தை நாங்கள் பதிவு செய்கிறோம்.

ஒரு  கொடியை ஏற்றுவதற்கு நீங்கள் தடுத்த காரணத்தினால், எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் நவம்பர் ஒன்றிலிருந்து பத்தாயிரம் கொடிகளை தமிழகம் முழுவதும் நாங்கள் ஏற்ற இருக்கின்றோம். தினம்தோறும் 100 கொடிகள் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின்  கொடியேற்றப்படும். அது இஸ்லாமியர்கள் பகுதிகளிலும் ஏற்றப்படும்.

இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்க கூடிய வேலையை திமுகவோ அல்லது பிற கட்சிகளோ,  விடுதலை சிறுத்தை போன்றவர்களோ செய்தால் ? இஸ்லாமியர்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின்  சிறுபான்மை அணி மிகக் கடுமையாக வரக்கூடிய காலங்களில் பணி செய்யும். சிறுபான்மை மக்களை ஒன்றிணைக்கும், இஸ்லாமியர்களும் – கிறிஸ்துவர்களும்   ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை நாங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஊடகத்தின் மூலமாக..  அராஜக போக்கை மேற்கொள்ளும் திமுகவிற்கு எச்சரிக்கையாக பதிவு செய்து கொள்கின்றோம் என தெரிவித்தார்.