தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.‌ அதேபோன்று மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வரும் அமலாபால் நடிப்பில் சமீபத்தில் ஆடு ஜீவிதம் திரைப்பட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு கடந்த வருடம் திருமணமான நிலையில் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நடிகை அமலா பாலுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. அதன்படி இவருக்கு கடந்த 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு Llai என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் தனக்கு குழந்தை பிறந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் நடிகை அமலா பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Jagat Desai (@j_desaii)