பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் சீட்டு வாங்க வாய்ப்பு இருக்கிறதா ?  என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,

நான் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை மாநாட்டில் சொல்லி இருக்கேன். தோழர்களுக்கு தெரியும். எனக்கு போட்டி போடுவதற்கு விருப்பம் கிடையாது. அதே நேரத்தை பொறுத்தவரை  எங்களுடைய கூட்டணி சார்பாக…. எங்களுடைய கூட்டணி தலைமை அண்ணன் தளபதி அவர் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதே நேரத்தில் கூட்டணியில் எத்தனை சீட்டு இதெல்லாம் எங்க இயக்க மூத்த நிர்வாகிகள் முடிவெடுப்பாங்க. அது பற்றி கருத்து நான் சொல்ல முடியாது.

எங்கள் இயக்கத்திற்கு உண்டான பம்பரம் சின்னத்தில் நிற்கணும் என்பதுதான் எங்க  கட்சிக்காரங்க எல்லோருடைய விருப்பம். அந்த விருப்பத்தை எங்களுடைய கூட்டணி தலைமை அண்ணன் தளபதி பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகு திமுக  கூட்டணியிலில் உள்ள கட்சிகள் செல்லும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,

ஊடக நண்பர்கள் நீங்கள் இந்த மாதிரி ஒரு விவாதத்தை உருவாக்கி இருக்கீங்க. அந்த கூட்டணியில் ஒரு விரிசல் வருவதற்கும், எங்கள் கூட்டணியில் அதனால் பாதிப்பு வருவதற்கு சம்பந்தமே கிடையாது. நாங்க கூட்டணி தலைமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த கூட்டணி உடைய இலக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் முக்கியம் என தெரிவித்தார்.