மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்த பிறகு பொறுப்புடன் நடிக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்றும் ஒரு சில படங்களில் மட்டும் தான் அதில் வரும் கதாபாத்திரத்தோடு எமோஷனலான ஃபீலிங் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் எல்லா படங்களும் அது போன்று அமைவதில்லை என்றும்  கூறியுள்ளார்.