இறந்த பிறகு உயிர் திரும்புவது சினிமாவில்தான் நடக்கும் கற்பனையாக நாம் பெரும்பாலும் நம்புவோம். ஆனால் உலகத்தில் சில உண்மை சம்பவங்கள் அதனை முற்றிலும் மறுக்கின்றன. தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெகி ராபின்சன் என்ற பெண், “நான் இரண்டு முறை இறந்துவிட்டு கடவுளிடம் முறையிட்டு உயிரோடு திரும்பினேன்” என்று அளித்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
64 வயதான பெகி, முதன்முதலில் தான் 5 வயதில் இருந்தபோது மரணத்தை சந்தித்ததாகவும், பின்னர் உயிருடன் திரும்பியதாகவும் கூறுகிறார். ஆனால் அவரது இரண்டாவது அனுபவம் தான் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25வது வயதில், ஒரு சிக்கலான கர்ப்ப காலத்தில், தன்னுடைய ஆவி உடலைவிட்டு வெளியே வந்து விண்வெளி வழியாக ஒரு பிரகாசமான வெள்ளை அறைக்குள் சென்றதாக கூறுகிறார். அங்கு தன்னை நேரடியாக கடவுள் முன்னிலையில் கண்டதாகவும், அதுவே தன்னுடைய வாழ்வின் மாற்றுத்தடையாக மாறியதாகவும் கூறுகிறார்.
“நீ செல்லும் நேரம் இது தான்” என கடவுள் கூறியபோது, “இல்லை, என்னுடைய குழந்தைகளை நான் வளர்க்க வேண்டும். தயவுசெய்து என்னை அழைத்துச் செல்லாதீர்கள்” என வலியுறுத்தினேன் என பெகி கூறுகிறார். அதன்பின் கடவுள் தன்னுடைய மகன்களின் எதிர்காலத்தை காட்டியதாகவும், அதில் சில துயரமான தருணங்களை பார்த்ததும் தனது மனம் உடைந்துவிட்டதாகவும் கூறுகிறார். கடவுளின் பாதத்தில் விழுந்து கதறி அழுதபின், “எனது ஆவி உடலுக்குள் திரும்பியது, கண்விழித்தபோது நான் மருத்துவமனையில் இருந்தேன்” என பகிர்ந்துள்ளார்.
இந்த அதிசயக் கூறுகள் பற்றிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நம்ப முடியாத வகையிலான இந்த அற்புத அனுபவம் சமூக வலைதளங்களில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
