அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள பிரேடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது கார் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கிருந்து வேகமாக வந்த கார் அவர் மீது மோத முயன்றது. இந்த பரபரப்பான காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன, இதனை பத்திரிகையாளர் ஜான்-கார்லோஸ் எஸ்ட்ராடா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததுடன், அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

https://m.facebook.com/reel/1311161347318467/?referral_source=external_deeplink&mibextid=ZZyLBr

வீடியோவில் தெளிவாகக் காணப்படும் வகையில், அந்த நபர் காரை சுத்தம் செய்து கொண்டிருந்த தருணத்தில், எதிர்புறம் இருந்து வந்த ஒரு வேகமான கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுழன்று தரையில் கவிழ்கிறது. அப்பொழுது அந்த நபர் வேகமாக ஓடி விலகுவதன் மூலம் தன்னுடைய உயிரை மீட்டுக் கொள்கிறார்.

இந்த அதிர்ச்சி தரும் காட்சியை கண்ட நெட்டிசன்கள், இது “Final Destination” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் உண்மைப் பதிவு போல உள்ளது எனக் கூறியுள்ளனர். பலரும் இதனை “உண்மையிலேயே ஒரு அதிசயம்”, “அதிர்ஷ்டம் தான்” என விவரித்து வர, சிலர் வீடியோவை தொடர்ந்து பார்த்தும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை எனக் கூறி வருகின்றனர்.