உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகளும் (Snakes) ஒன்றாகும். ஆனால், ஒரு இளைஞர் பாம்பை வேடிக்கைப் பொருள் போல உபயோகிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவில் உள்ள இளைஞர், “பாம்புகளை விட மனிதர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்” என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.
வைரலாகும் வீடியோவில், அந்த இளைஞர் ஒரு பச்சைப் பாம்பைப் பிடித்துக்கொண்டு, அதுத் தாக்காதபடி அதன் வாயைக் கெட்டியாகப் பிடித்துள்ளார்.
पूरे सांप समाज में भय का माहौल है। इस बार सांप गलत आदमी के हाथ लग गया है…👇👇 pic.twitter.com/ILtfW0f7ny
— Priyanka kumari (@Priyank22916194) December 2, 2025
அதன்பிறகு, அந்தப் பாம்பை ஒரு கயிறைப்போலச் சுருட்டி, ஆங்காங்கே முடிச்சுப் போடுவது போல் இறுக்கிக் கட்டி வேடிக்கை பார்க்கிறார். வாயை அழுத்தமாகப் பிடித்திருந்ததால், பாம்பு அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் சட்டையின் அடியில் மாட்டிக்கொண்டு, அமைதியுடன் இருக்கிறது.
“இந்த மனிதன் பாம்பைக் கயிற்றைப் போலப் பிடித்து விளையாடுகிறான்” என்றும், “இந்த முறை பாம்பு தவறுதலாக தவறான மனிதனிடம் மாட்டிக் கொண்டது” என்றும் மக்கள் வேடிக்கையாகப் பின்னூட்டமிட்டுள்ளனர். “ஒருநாள் முழுவதுமான கோபத்தை அந்தப் பாம்பின்மீது தீர்த்திருக்கிறார் போல!” என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
