சமூக வலைத்தளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு நாய் ‘டொகேஷ் பாபா’ (Dogesh Baba) போல மனிதர்களைப்போல் இரண்டு கால்களில் அமர்ந்துகொண்டு, தன்னைச் சந்திக்க வரும் மற்ற நாய்களுக்குத் தலைமீது கை வைத்து ஆசீர்வாதம் வழங்குவது போல் காட்சி அளிக்கிறது.

இந்த வீடியோவில், வரிசையாக வரும் ஒவ்வொரு நாயும் அந்த ‘பாபா’ நாயிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வதைப் பார்க்கும்போது, அது உண்மையாகவே ஆசி வழங்குவது போலத் தோன்றுகிறது.

இந்தச் செயலைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் இல்லை. பலர், “இந்தச் சாமியார் நாய் இருக்கிற இடம் எங்கே?” என்று கேட்டு வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இந்தச் சாமியார் நாயைப் பற்றிப் பெருமைப்படுங்கள்” என்றும், “இது எல்லாவற்றிற்கும் ஆசீர்வாதம் வழங்குகிறது, எல்லா நாய்களும் சொர்க்கத்திற்குச் செல்லும்” என்றும் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.