கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சூண்டல் பகுதியில் சாலையில் நடந்து செல்பவர்கள் முதல் பலரை தெரு நாய்கள் அவ்வப்போது கடித்து வருகிறது. சமீபத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் என கிட்டத்தட்ட மூன்று பேரை நாய்கள் கடித்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியின் வளாகத்தில் தற்போது ஒரு தெரு நாய் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து தெரு நாய் குட்டிகளை அது ஈன்றெடுத்த நிலையில் பயத்தின் காரணமாக தற்போது பள்ளிக்கு விடுமுறை விடபட்டுள்ளது. நேற்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாநகராட்சியிலிருந்து அதிகாரிகள் வந்து தெரு நாய் மற்றும் குட்டிகளை அங்கிருந்து பிடித்து சென்றதால் நாளை முதல் பள்ளி திறக்கப்படும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
