
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடாவில் வசிக்கும் தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வந்துள்ளார்.
இவர் துபாயில் ஹோட்டல் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது இவரது கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்கநகைகளை அணிதம்படி வந்துள்ளார். இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.