நம் பகுதியில் நிலவும் சில மணி நேர குளிரையே தாங்க முடியாத நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் சராசரியாக -50 டிகிரி வெப்பநிலையில் மக்கள் வாழ்ந்து வருவது பலரை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தி உள்ளது. அண்டார்டிகாவுக்கு வெளியே ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள உலகின் மிக குளிரான இடமான ஒமியாக்கான் கிராமத்தில் சராசரி வெப்பநிலை மைனஸ் -50 டிகிரி ஆகும்.
இங்கே எந்த பயிர்களும் வளராத அளவிற்கு இங்குள்ள குளிர் நிலவிவரும் நிலையில் மக்கள் பெரும்பாலும் மாமிச உணவுகளையே உட்கொள்கின்றனர். ரஷ்ய ஊடகங்களின் அறிக்கை படி 1924-ம் ஆண்டில் இந்த இடத்தின் வெப்பநிலை -71.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.