அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண் அவரை விட 21 வயது அதிகம் கொண்ட நபரை திருமணம் செய்ய போவது குறித்து கூறியுள்ளார்.

அமெரிக்க நாட்டில் வசிக்கும் 28 வயதான கேரல் கே டெரி என்ற இளம்பெண்ணும், 49 வயதுடைய மிட்ச் கேர்னே என்ற நபரும் காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். அந்த பெண், இதற்கு முன்பே 55 வயதுடைய ஒரு நபரை காதலித்து பிரிந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும், அவர் கூறுகையில், எங்களை பார்க்கும் பலரும் நீங்கள் இருவரும் தந்தை, மகளா என்று கேட்கிறார்கள். அவற்றைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. தங்கள் துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை. வயது அதிகம் கொண்டவர்கள் தான் அதிக முதிர்ச்சியடைந்திருப்பார்கள். பிறர் தங்களின் வாழ்க்கையில் என்ன விரும்புகிறார்கள்? என்று அறிந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.