சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை பவர் பேங்கில் சார்ஜ் செய்திருந்தார். திடீரென்று, அந்த சார்ஜர் வெடித்து அதிகளவில் புகை வெளியேறியது.

இதனால், பதறிப்போன அவர் சார்ஜரை தரையில் தூக்கி எறிந்தார். உடனடியாக விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பதறிய பயணிகள் சத்தமிட்டனர். ஆனால், சாதுரியமாக செயல்பட்ட விமான பணிப்பெண்கள் தீயணைக்கக்கூடிய கருவிகள் மூலமாக அணைத்து விட்டார்கள்.

மேலும், பயணிகள் பயப்படாமல் அமைதியாக இருக்குமாறு கூறி நிலையை சரி செய்துள்ளனர். அதன் பிறகு, அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். மொபைலை சார்ஜ் செய்திருந்தவருக்கும் அவருடன் இருந்த பயணிகள் இருவருக்கும் சிறிது காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.