அண்ணாமலை இல்லாமல் பாஜக கூட்டம் தொடங்கியது. பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது.

சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக ஆலோசனை கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி நிலையில் மாவட்ட தலைவர் கூட்டம் நடக்கிறது.